
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் வடிவேலு நடனமாடும் புரமோஷன் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்க நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பெரும் இடைவெளிக்குப் பின்னர் பிரதான வேடத்தில் வடிவேலு தோன்றுகிறார். மீம்ஸ்களில் அதிகம் பகிரப்படும் வடிவேலு பாணி வசனங்களை உருவாக்கி, அவரது தனித்துவ நகைச்சுவைக்குக் களம் அமைத்துத் தந்த சுராஜ் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 14-ம் தேதி வெளியானது. வடிவேலு ரசிகர்களுக்கு சர்ப்ஃரைஸ் கொடுக்கும் விதமாக, அவர் சொந்தக் குரலில் பாடி ஆடும் ‘அப்பத்தா’ பாடலை லைகா நிறுவனம் வெளியிட்டது. அதுபோல் வடிவேலு பாடிய மற்றொரு பாடலான ‘நான் டீசன்டான ஆளு’ லிரிக்ஸ் ஆடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷனுக்காக இந்திய அளவில் பிரபலமாக ‘கச்சா பாதாம்’ பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடும் வீடியோவை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. தனது உடல்மொழியால் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வடிவேலு நடனமாடியிருக்கிறார்.