வடிவேலுவின் அசத்தல் டான்ஸ் வீடியோ - ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’

வடிவேலுவின் அசத்தல் டான்ஸ் வீடியோ - ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’

‘எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்டை கேக்கும்’ பாடலை பாடியபடியே பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரின் காமெடி காட்சிகள் மற்றும் வசனங்கள்தான் பெரும்பாலும் மீம்ஸ் கண்டென்ட்களாக வலம் வருகின்றன. சில வருடங்களாக அதிகளவில் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது ‘ நாய்சேகர் ரிட்டன்ஸ்’, ‘மாமன்னன்’ திரைப்படங்கள் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’, ‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் ‘எட்டணா இருந்தா எட்டூரு என் பேச்சைக் கேக்கும்’, காலம் மாறிப்போச்சு படத்தில் ‘வாடி பொட்டப்புள்ள வெளியே’ உள்ளிட்ட பல பாடல்களையும் பாடியுள்ளார் வடிவேலு.

தற்போது தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’ பாடலை பாடியபடியே நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in