வர வர பிசியாகும் வடிவேலு: ரஜினி படத்தில் நடிக்கிறாரா?

வர வர பிசியாகும் வடிவேலு: ரஜினி படத்தில் நடிக்கிறாரா?

ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘பீஸ்ட்’ படத்தை முடித்துள்ள நெல்சன் ரஜினி படத்தின் முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார். வரும் தீபாவளிக்கே இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் நெல்சன் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ரஜியுடன் வடிவேலு நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசியாக 2008-ல் வெளியான ‘குசேலன்’ படத்தில் நடித்திருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினியுடன் நடிக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வரும் வடிவேலு, லைக்காவிலேயே 3 படங்கள் கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.