`சாதி ரீதியான இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்'- சர்ச்சையில் சிக்கிய 'வாத்தி' பட இயக்குநர்

இயக்குநர் வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரி’’இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்’’ - சர்ச்சையில் சிக்கிய வாத்தி பட இயக்குநர்

’’ஒரு வேளை கல்வி அமைச்சரானால் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ஒழித்து, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவேன்’’ என 'வாத்தி' பட இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

’’வாத்தி’’ திரைப்படத்தின் தலைப்பு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிப்புரியும் ஆசிரியர்களை எள்ளி நகையாடும் வகையில் உள்ளது என ஆசிரியர்கள் கூட்டமைப்பு போர்க் கொடித் தூக்கியுள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி சர்ச்சையாகியுள்ளது.

அதில், ஒருவேளை நீங்கள் கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘’ இது சர்ச்சையான பதிலாகக் கூட இருக்கலாம். தற்போது இருக்கக் கூடிய இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். சாதி ரீதியிலான இடஒதுக்கீடு கூடாது, பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவேன். அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்’’ என கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in