8 நாட்களில் 75 கோடி வசூல் செய்து சாதித்தது தனுஷூன் `வாத்தி'

 தனுஷூன் `வாத்தி'
தனுஷூன் `வாத்தி'’’வாத்தி’’ திரைப்படம் 8 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளது - இயக்குநர் வெங்கி அட்லூரி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’’வாத்தி’’ திரைப்படம் 8 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

’’வாத்தி’’ வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடி படக்குழு
’’வாத்தி’’ வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடி படக்குழு’’வாத்தி’’ திரைப்படம் 8 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளது - இயக்குநர் வெங்கி அட்லூரி

’’வாத்தி’’ திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ‘’ இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் படமாக ’’வாத்தி’’ அமைந்துள்ளது மகிழ்ச்சி.

கடந்த 8 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தயாரிப்பாளர் இங்கு வரவில்லை. அவர் வசூலான பணத்தை எண்ணுவதில் மும்முரமாக உள்ளார். நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in