நிஜமான வாத்தியாருக்கு, ‘வாத்தி’ படக்குழு மரியாதை!

நிஜ ’வாத்தி’ ரெங்கையா உடன் வெங்கி அட்லூரி
நிஜ ’வாத்தி’ ரெங்கையா உடன் வெங்கி அட்லூரி

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படத்தின் கதைக்கு ஆதாரமான நிஜ ஆசிரியரை வரவழைத்து கவுரவித்து மகிழ்ந்திருக்கிறது வாத்தி படக்குழு.

தனுஷ் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வாத்தி. இது தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் வெளியானது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த திரைப்படத்தினை இயக்கி இருந்தார். வாத்தி திரைப்படத்தின் கதை ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவானது ஆகும்.

அந்த நிஜ ஆசிரியரின் பெயர் கே.ரெங்கையா. மிக இளம் வயதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியராக சேவையாற்றிய இவர் கடந்து வந்த கசப்பும், நெகிழ்வுமான பணி அனுபவங்களில் இருந்தே வாத்தி கதையை நெய்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தின் சாவர்கோட் கிராமத்தில் மூடப்பட இருந்த ஓர் அரசுப் பள்ளியை மீட்டு, அதன் மாணவர் சேர்க்கைக்காக தன்னாலானதை செய்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்தவர் இந்த ரெங்கையா. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியரின் வாழ்க்கையிலும் இவர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.

இவரது இந்த அரிய சேவைக்காக இளம் வயதில் குடியரசுத்தலைவர் விருதையும் பெற்றிருக்கிறார். வாத்தி திரைப்படத்தின் கதைக்கு ஆதாரமான நிஜ ஆசிரியர் கே.ரெங்கையாவை அண்மையில் வரவழைத்த வாத்தி திரைப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, அவருடன் உரையாடி மகிழ்ந்தார் . இந்த உரையாடலில், ஆசிரியர் கே.ரெங்கையா தனது 13 பணி அனுபவத்தில் சந்தித்த போராட்டங்களையும் பகிர்ந்து கொண்டார்.

ஆசிரியர் கே.ரங்கையாவை கவுரவிக்கும் விதமாக, நூலகம் ஒன்றை அவர் நிர்மாணிக்க உதவியாக ரூ.3 லட்சம் நன்கொடையை வழங்கி மகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in