போனி கபூருக்கே `வாலி' ரீமேக் உரிமை: போராடிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு தோல்வி

போனி கபூருக்கே `வாலி' ரீமேக் உரிமை: போராடிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு தோல்வி

வாலி படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருந்த நிலையில் ரீமேக் செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என கூறி எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அஜித் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இரட்டையர்களில் தம்பி அஜித்தின் மனைவியான சிம்ரனை அடைய அண்ணன் அஜித் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் இந்தப் படத்தின் கதை.

எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கிய முதல் படம் ‘வாலி’. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போனி கபூர் இதன் உரிமையை வாங்கியிருந்தார். அப்படி ரீமேக் உரிமையை விற்க தயாரிப்பாளர் மட்டும் முடிவெடுத்தால் போதாது, அந்தப் படத்தின் கதாசிரியர் மற்றும் இயக்குநருக்கும் உரிமை உள்ளது என்று எஸ்.ஜே.சூர்யா வழக்கு தொடர்ந்தார்.

பல கட்ட விசாரணக்கு பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in