`மஞ்சத் தண்ணி ஊத்து, உன் மாமனைத்தான் பார்த்து’: ‘த லெஜண்ட்’ பாடல் வெளியீடு

`மஞ்சத் தண்ணி ஊத்து, உன் மாமனைத்தான் பார்த்து’: ‘த லெஜண்ட்’ பாடல் வெளியீடு

`த லெஜண்ட்' படத்தின் 'வாடிவாசல்' பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படம், ’த லெஜண்ட்’. அவர் ஜோடியாக, இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா நடிக்கிறார். லட்சுமி ராய் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஜேடி-ஜெர்ரி இயக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி, ’வாடிவாசல்’ என்ற பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் லெஜண்ட் சரவணனும் ராய் லட்சுமியும் ஆடுகின்றனர். பிரம்மாண்ட செட், ஏராளமான நடனக் கலைஞர்கள் என கலர்புல்லாகவும் ரிச்சாகவும் பாடலை படமாக்கியுள்ளனர். ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.

பாடலை ஜோனிதா காந்தியும் பென்னி தயாளும் பாடியுள்ளனர். சினேகன் எழுதியுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in