காம்பஸை வைத்து நச்சுனு குத்துங்க!: பெண்களுக்கு நடிகை ஐஸ்வர்யா தரும் டிப்ஸ்

நடிகை ஐஸ்வர்யா
நடிகை ஐஸ்வர்யாகாம்பஸை வைத்து நச்சுனு குத்துங்க!: பெண்களுக்கு நடிகை ஐஸ்வர்யா தரும் டிப்ஸ்

பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கையில் சேஃப்டி பின் அல்லது காம்பஸ் வைத்துக்கொள்ள வேண்டும். தப்பான எண்ணத்தில் அருகில் யாரும் வந்தால், நச்சுனு குத்துவிடுங்கள் என்று நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகை லெட்சுமியின் மகளான ஐஸ்வர்யா, தெலுங்கு படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய 'ராசுக்குட்டி' படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகையானார். 'மில் தொழிலாளி', 'தையல்காரன்', 'மீரா', 'உள்ளே வெளியே' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இதன் பின் 'எஜமான்','காசி','பஞ்சதந்திரம்',' எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'ஆறு', 'பரமசிவம்', 'பிரியசகி', 'பழனி', 'அபியும் நானும்' என பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான 'யானை' படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்," பெண்கள் தலையைக் குனிந்துக்கொண்டே செல்வதால் தான், பின்னால் யார் வருகிறார்கள், என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கையில் சேஃப்டி பின் அல்லது காம்பஸ் வைத்துக்கொள்ள வேண்டும். தப்பான எண்ணத்தில் அருகில் யாராவது வந்தால் நச்சுனு குத்துவிடுங்கள்" என்றார்.

பெண்கள் குடிப்பது குறித்த கேள்விக்கு, " எல்லாமே ஒரு செயற்கையான மகிழ்ச்சிதான், அதன் பிறகு ரியாலிட்டிக்கு வந்தே தீரவேண்டும். குடிப்பதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நிறுத்த தேவையில்லை. காலையில் எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன், ஆனால், அனைத்திற்கும் ஒரு வரைமுறை இருக்கு.

நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன், வாழ்க்கையில் நிறைய வலி கொடுக்கும் விஷயங்கள் நடந்து இருக்கலாம், சிலவற்றை சொல்ல முடியும், சிலவற்றைச் சொல்ல முடியாது. இதுதான் மன அழுத்தமாக வெளிவருகிறது. இதற்காக மன நலமருத்துவரிடம் ஆலோசனை செய்தேன். அவர் மெடிடேஷன் செய்யச் சொன்னார். ஆனால், மெடிடேஷன் என்னை மிகவும் சோர்வாக்கியது. அந்த நேரத்தில் தான் என் சிறுவயது நண்பர்களை ஃபேஸ்புக் மூலம் சந்தித்தேன். அவர்களிடம் பல விஷயங்களை பேசினேன், இப்போது, மனஅழுத்தம் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in