'திருட்டுப் பயலே 2' இந்தி ரிமேக் ரிலீஸ் எப்போது?

'திருட்டுப் பயலே 2' இந்தி ரிமேக் ரிலீஸ் எப்போது?
ஊர்வசி ரவுத்லா

சுசிகணேசன் இயக்கியுள்ள ’திருட்டுப் பயலே 2’ படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுசி கணேசன் தமிழில் இயக்கிய படம், ’திருட்டுப் பயலே 2’. பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இதன் விறுவிறுப்பான திரைக்கதை பாராட்டப்பட்டது. இந்தப் படத்தை இந்தியில், தில் ஹே க்ரே ('Dil Hai Gray) என்ற பெயரில் சுசி கணேஷன் ரீமேக் செய்துள்ளார்.

படப்பிடிப்பில் இயக்குநர் சுசி கணேசன்
படப்பிடிப்பில் இயக்குநர் சுசி கணேசன்

இதில், வினித் குமார் சிங், அக் ஷய் ஓபராய், ஊர்வசி ரவுத்லா, ரங்கராஜ் பாண்டே, சீதா ஆகியோர் நடித்துள்ளனர். சீதா நடிக்கும் முதல் இந்திப் படம் இது. சுராஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ளார். இந்தப் படம் கரோனாவுக்கு முன்பே முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை இப்போது அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் நாயகியாக நடித்துள்ள ஊர்வசி , லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

Related Stories

No stories found.