`சேத்துமான்’ இயக்குநர் படத்தில் `உறியடி’ விஜயகுமார்!

`சேத்துமான்’ இயக்குநர் படத்தில் `உறியடி’ விஜயகுமார்!

`சேத்துமான்' இயக்குநரின் அடுத்தப் படத்தில் உறியடி விஜய்குமார் நடிக்கிறார்.

எழுத்தாளர் பெருமான் முருகனின் கதையை மையமாக வைத்து உருவான படம் சேத்துமான். ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதை தமிழ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தை அடுத்து தமிழ் இயக்கும் படத்தில் உறியடி விஜய்குமார் நடிக்கிறார்.

ப்ரீத்தி அஸ்ரானி
ப்ரீத்தி அஸ்ரானி

ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கிராமத்துப் பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல் கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பை சென்னை அருகே, ஒரே கட்டமாக 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே தொடரிலும் நடித்துள்ளார்.

திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in