ரஜினியுடன் நடிக்க விரும்பும் உபேந்திரா!

உபேந்திரா
உபேந்திராரஜினியுடன் நடிக்க விரும்பும் உபேந்திரா!

``நடிகர் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டும்'' என்ற தனது விருப்பத்தை நடிகர் உபேந்திரா வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வாரம் ‘கப்ஜா’ படம் வெளியானது. சுமாரான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்திற்காக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க விருப்பம் இருப்பதை உபேந்திரா தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சந்தேகமே இல்லாமல் ரஜினி சார்தான். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல், எனக்கும்தான். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இது என்னைப்போன்ற நடிகர்கள் அனைவரது விருப்பமும்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு, உபேந்திரா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர்’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். மேலும், உபேந்திரா இயக்கத்தில் கன்னடப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சி என்பதையும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in