‘லால் சிங் சட்டா’ ரிலீஸ் எப்போது? - புது முடிவில் ஆமிர்கான்

‘லால் சிங் சட்டா’ ரிலீஸ் எப்போது? - புது முடிவில் ஆமிர்கான்
‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் ஆமிர்கான்

ஹிந்தியில் ஆமிர்கான் தயாரித்து நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘லால் சிங் சட்டா’. இந்தத் திரைப்படத்தில் ஆமிர்கான் ராணுவ வீரராக நடிக்கிறார். பாலா என்ற ஆந்திர இளைஞராக இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா. ஆரம்பத்தில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். பின்னர், கால்ஷீட் பிரச்சினையால் அவர் இந்தத் திரைப்படத்திலிருந்து விலகினார். ஹாலிவுட்டில் வெளியான புகழ்பெற்ற திரைப்படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ஹிந்தி ரீமேக்காக உருவாகிவருகிறது ‘லால் சிங் சட்டா’. அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், கரீனா கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

‘ஃபாரஸ்ட் கம்ப்’ - ‘லால் சிங் சட்டா’
‘ஃபாரஸ்ட் கம்ப்’ - ‘லால் சிங் சட்டா’

கரோனா தொற்று காரணமாகப் படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், காதலர் தினத்தின்போது படத்தை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் ஆமிர்கான். ஆனால், திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டதால், தற்போது ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்ற முடிவு செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு இறுதியில்தான், லால் சிங் சட்டா வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in