
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் படப்பிடிப்பு தளத்தில் சூரி மற்றும் சசிகுமாருடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
'விடுதலை 2'-ம் பாகத்தில் நடித்து வரும் சூரி புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் இத்திரைப்படத்தில், சூரியுடன் இணைந்து சசிகுமார் மற்றும் மலையாள பிரபலம் உன்னி முகுந்தனும் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள்.
மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சூரி மற்றும் சசிகுமாருடன் இணைந்து உன்னி முகுந்தன் தனது பிறந்தாளைக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.