சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை: உறுதிப்படுத்தியது படக்குழு

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை: உறுதிப்படுத்தியது படக்குழு
மரியா ரியபோஷப்கா, சிவகார்த்திகேயன்

சிவகார்த்தியேன் ஜோடியாக உக்ரைன் நடிகை நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.

இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘ஜதி ரத்னலு’ என்ற காமெடி படத்தை தெலுங்கில் இயக்கியவர் அனுதீப். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மரியா ரியபோஷப்கா
மரியா ரியபோஷப்கா

ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடியில் தொடங்கியது.

தென்னிந்திய இளைஞரை வெளிநாட்டுப் பெண் காதலிப்பதைப் போன்ற கதையை கொண்ட இதில், உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா (Maria Ryaboshapka) என்ற நடிகை நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாயின. இந்நிலையில் அவர் நடிப்பதை படக்குழு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.