விஷ்ணு விஷால் படத்தை வெளியிடும் உதயநிதி

எஃப்ஐஆர்
எஃப்ஐஆர்

விஷ்ணு விஷால் நடித்துள்ள ’எஃப்ஐஆர்’ படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய, அஜித்தின் வலிமை, ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் உட்பட பல மெகா பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

கரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்றவற்றை அரசு ரத்து செய்துள்ளது. இதனால், திரைப்படங்களின் ரிலீஸ் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ படம் வரும் 4 -ம் தேதி வெளியாகிறது. ராஜமெளலியின் பிரம்மாண்ட ’ஆர் ஆர் ஆர்’ படம் மார்ச் மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்துள்ள ’எஃப்ஐஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மஞ்சுமா மோகன் நடிக்க ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஷ்ணு விஷால் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இதே தேதியில் விஜய் சேதுபதியின் ’கடைசி விவசாயி’ படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in