`கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்

`கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கு ’கலகத் தலைவன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை அடுத்து அவர், மாரி செல்வராஜ் இயக்கும் `மாமன்னன்' திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படங்களுக்கு முன்பே, உதயநிதி நடித்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வந்தார். கரோனா காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. மகிழ் திருமேனி, அருண் விஜய்யின் தடையறத் தாக்க, தடம், ஆர்யாவின் மீகாமன் படங்களை இயக்கியவர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இப்போது இந்தப் படத்துக்கு ’கலகத் தலைவன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த தலைப்பு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in