பன்றியின் படம் பொறித்த சட்டை; மாரி செல்வராஜுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

பன்றியின் படம் பொறித்த சட்டை; மாரி செல்வராஜுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
பன்றியின் படம் பொறித்த சட்டை; மாரி செல்வராஜுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு காரை பரிசாக அளித்துள்ளார் உதயநிதி.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in