கமல்ஹாசனை நேரில் சந்தித்து உதயநிதி திடீர் வாழ்த்து!

கமல்ஹாசனை நேரில் சந்தித்து உதயநிதி திடீர் வாழ்த்து!

’விக்ரம்’ படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், இன்று (ஜூன் 3) வெளியாகியுள்ளது.

நான்கு வருடத்துக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கமல்ஹாசனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விக்ரம் படக்குழுவுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in