நாயகனாக சூரி... வாத்தியாராக விஜய் சேதுபதி: உதயநிதி வெளியிட்ட ‘விடுதலை’ அப்டேட்!

நாயகனாக சூரி... வாத்தியாராக விஜய் சேதுபதி: உதயநிதி வெளியிட்ட ‘விடுதலை’ அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ திரைப்படம் குறித்த அறிவிப்பினை உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், தனது நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இப்படம் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் இரண்டு போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஒரு போஸ்டரில் சூரி காவலர் உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படமும், மற்றொரு போஸ்டரில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கதையின் நாயகனாக சூரி மற்றும் வாத்தியாராக விஜய் சேதுபதி நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விடுதலை’ படத்தின் போஸ்டரில் ‘உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்’ என்ற திருக்குறளும் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனமும், வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in