'விக்ரம்’ படத்துக்கு கிடைக்கும் ஷேர் தொகை எவ்வளவு?: ஓபனாக சொன்ன உதயநிதி

'விக்ரம்’ படத்துக்கு கிடைக்கும் ஷேர் தொகை எவ்வளவு?: ஓபனாக சொன்ன உதயநிதி

’விக்ரம்’ படத்துக்கு கிடைக்கும் ஷேர் தொகை எவ்வளவு என்று உதயநிதி தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன், தயாரிப்பாளர் கேயார், செண்பகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:

இதுவரை இந்தப் படத்தை ஏழு முறை பார்த்துவிட்டேன். 5 வயது குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை இந்தப் படத்தை ரசிக்கிறார்கள். இந்தப் படம் ஹிட்டாகும் என்று நினைத்தேன். இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. படத்தோட வசூல் பற்றி விநியோகஸ்தராகச் சொல்கிறேன். மூன்றாவது வாரத்தை நெருங்கி இருக்கிறோம். இதுவரை ஷேர் மட்டுமே ரூ.75 கோடி கிடைக்கும். எந்தப் படமும் இவ்வளவு வசூல் ஆனதில்லை. இன்னும் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்கள் நன்றாக ஓடும் என்று நம்புகிறேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in