`விக்ரம்’ படத்தின் வசூல் நம்ப முடியாத அளவில் இருக்கிறது'- பிரமிக்கும் உதயநிதி ஸ்டாலின்

`விக்ரம்’ படத்தின் வசூல் நம்ப முடியாத அளவில் இருக்கிறது'- பிரமிக்கும் உதயநிதி ஸ்டாலின்

கமல் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தின் வசூல் நம்ப முடியாத அளவில் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. கடந்த 3-ம் தேதி வெளியான இந்தப் படம், முதல் நாளில் இருந்தே நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழைப் போல மற்ற மொழிகளில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் நம்ப முடியாத அளவில் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘விக்ரம்’ படத்தின் வசூல் நம்பமுடியாத அளவில் உள்ளது என்றும் இந்த வார இறுதியில், பல வசூல் சாதனைகளை இந்தப் படம் முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in