`வாரிசு' படத்தின் விநியோக உரிமையை வாங்கியது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்!

`வாரிசு' படத்தின் விநியோக உரிமையை வாங்கியது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்!

அஜித்தின் `துணிவு' படத்தைத் தொடர்ந்து 'வாரிசு' படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதேபோல், போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இரண்டு நடிகர்களும் முன்னணியில் இருப்பதால் சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்வதில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பொங்கல் அன்று 'வாரிசு' படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று தெலுங்கு முன்னணி நடிகர்கள் படம் வெளியாக இருப்பதால் 'வாரிசு' படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள 'வாரிசு' படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 17 ஸ்டுடியோ என்ற நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் 'வாரிசு' திரைப்படத்தை வெளியிடும் உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' படத்தை ரெட் ஜெய்ன்ட நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. தற்போது தமிழகத்தின் முக்கிய 4 இடங்களில் 'வாரிசு' படத்தின் விநியோக உரிமையையும் ரெட் ஜெயன்ட் பெற்றுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in