உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு கூட்டணி: நிறைவுபெற்றது ‘மாமன்னன்’ படப்பிடிப்பு!

உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு கூட்டணி: நிறைவுபெற்றது ‘மாமன்னன்’ படப்பிடிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவின் காம்போவில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி, வடிவேலு, மார்செல்வராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த ட்வீட்டில், “ ’மாமன்னன்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி. படத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க காத்திருக்க முடியாது’ என தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என தெரிவித்துள்ளார்.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in