'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சக்கட்டம் தொட்டவளே': சர்ச்சையைக் கிளப்பியுள்ள நடிகர் விஜய்யின் 'வாரிசு' படப்பாடல்

'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சக்கட்டம் தொட்டவளே': சர்ச்சையைக் கிளப்பியுள்ள நடிகர் விஜய்யின் 'வாரிசு' படப்பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்திற்காக வெளியாகியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வரிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. 'வாரிசு' படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் புரோமோ நவ.3-ம் தேதி வெளியிடப்பட்டது. தமன் இசையில் விவேக் எழுதிய `ரஞ்சிதமே ரஞ்சிதமே' என தொடங்கும் பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி பாடியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் நவ.5-ம் தேதியன்று வெளியானது. இந்த பாடலில் சர்ச்சையை ஏற்படுத்தும் வரிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் பாடல்களைச் சிறுவர்கள் விரும்பி ரசிக்கும் நிலையில், வாரிசு படத்தில் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வரிகள் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

'சத்திரமே சத்திரமே நான் நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே', ' உச்சு கொட்டும் நேரத்திலே உச்சக்கட்டம் தொட்டவளே' என எழுதப்பட்ட இப்படத்தின் பாடல் வரிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான வரிகளை எழுத நடிகர் விஜய் எப்படி அனுமதித்தார் என்பதுடன் எப்படி அந்த பாடலை அவர் பாடினார் என்றும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு சமூகப்பொறுப்புணர்வு வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in