’பிக் பாஸ்’ கமல்ஹாசன்...
’பிக் பாஸ்’ கமல்ஹாசன்...

பிக் பாஸ் சீசன்7 : ரெண்டு வீட்டில் ஷூட்டிங்.. யார் யார் கலந்துக்கறாங்க? லேட்டஸ்ட் அப்டேட்!

விரைவில் தொடங்க இருக்கும் புதிய ‘பிக் பாஸ்’ சீசன் குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் வருகிற அக்டோபர் மாதம் தனது ஏழாவது சீசனைத் தொடங்க இருக்கிறது. இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்தியைப் போலவே, தமிழிலும் ஓடிடியில் குறிப்பாக 24*7 என பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கினார்கள். இப்போது இந்த ஏழாவது சீசனில் வழக்கம் போலவே விஜய் டிவி பிரபலங்கள், வெளிநாட்டு மாடல்கள், சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள், பாடகர்கள் ஆகியோரை களம் இறக்கத் திட்டமிட்டு வருகிறது விஜய் டிவி.

பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு

கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனை வைத்து இந்த சீசனுக்கான புரோமோ ஷூட்டும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசன் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடு செட் அமைத்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் புதிய பிக் பாஸ் போட்டியாளர்களும், இன்னொரு வீட்டில் பழைய பிக் பாஸ் போட்டியாளர்களும் தங்க வைக்கப்பட இருக்கிறார்கள். ஆனால், பழைய போட்டியாளர்கள் தான் வருவார்களா அல்லது புதிய போட்டியாளர்களையே பிரித்து தங்க வைக்கிறார்களா என்பது முடிவாகவில்லை என்கிறார்கள். இந்த இரண்டு வீடு கான்செப்ட் இந்தியில் பிரபலமான போதிலும், தமிழில் இதுவே முதல் முறை என்பதால் பார்வையாளர்களிடையே வரவேற்பு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. இந்த சீசனில் பப்லு பிரித்விராஜ், தினேஷ், ரேகா நாயர், ஷர்மிளா ஆகியோரது பெயர்கள் போட்டியாளர்களின் பெயர்களுடன் வலம் வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in