படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து 2 நடிகர்கள் பலி!: 6 பேர் படுகாயம்

படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து 2 நடிகர்கள் பலி!: 6 பேர் படுகாயம்

படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது வேன் கவிழ்ந்ததில், 2 நடிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு உலகெங்கிலும் பல லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர்.ஏராளமான திரைப்படங்களுடன் சிறப்பு தொடர்களையும் இந்த தளம் தயாரித்து வெளியிடுகிறது. அதில் ஒன்று ’தி ஜோசன் ஒன்’ (The Chosen One). அமெரிக்கன் ஜீசஸ் என்ற காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் தொடர் இது.

ரைமண்டா குர்டானோ மற்றும் அவான் பிரான்சிஸ்கோ உட்பட பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு மெக்ஸிகோவில் நடந்து வந்தது.

படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் ஒரு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். பஜா கலிபோர்னியாவில் உள்ள சுர் தீபகற்பத்தின் முலேஜ் அருகே, வந்துகொண்டிருந்தபோது திடீரென வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த நடிகர்கள் ரைமண்டா குர்டானோ மற்றும் அவான் பிரான்சிஸ்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சாலை விபத்தில் இரண்டு நடிகர்கள், உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in