`நான் தற்கொலை செய்கிறேன்'- போலீஸுக்கு வீடியோ காலில் பேசி உயிரை மாய்க்க முயன்ற சின்னத்திரை நடிகை

`நான் தற்கொலை செய்கிறேன்'- போலீஸுக்கு வீடியோ காலில் பேசி உயிரை மாய்க்க முயன்ற சின்னத்திரை நடிகை

தூக்க மாத்திரைகளைத் தின்று பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை கட்டா மைதிலி. ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் வசித்து வரும் இவர் தனது கணவர் மீது கடந்த 6 மாதத்துக்கு முன் புகார் கொடுத்திருந்தார். அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், பஞ்சகுட்டா போலீஸாருக்கு நேற்று வீடியோ கால் செய்த அவர், தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறிவிட்டு போனைத் துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், பரபரப்பாக செயல்பட்டு போன் சிக்னலை வைத்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவர் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரை நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in