காதலனுடன் வசித்து வந்த நடிகை திடீர்  தற்கொலை: சாவதற்கு முன்எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?காதலனுடன் வசித்து
வந்த நடிகை திடீர்  தற்கொலை: சாவதற்கு முன்எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

காதலனுடன் வசித்து வந்த சின்னத்திரை நடிகை திடீரென தற்கொலை செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராஷ்மிரேகா ஓஜா (23). ’கெமிதி கபி கஹா’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். புவனேஸ்வர் அடுத்த நயபள்ளி கட்சாஹியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டு உரிமையாளர் அளித்த தகவலை அடுத்து போலீஸார், ராஷ்மிரேகா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அங்கிருந்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், "யாருடைய நிர்ப்பந்தத்திலும் தான் தற்கொலை செய்யவில்லை" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகை ராஷ்மிரேகா, சந்தோஷ் பத்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ராஷ்மி தற்கொலைக்கு அவர்தான் காரணம் என்று நடிகையின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

ராஷ்மிரேகாவின் தந்தை கூறும்போது," கடந்த சனிக்கிழமை மகளுக்கு போன் செய்தேன். பதில் இல்லை. சந்தோஷிடம் விசாரித்தபோது, ராஷ்மி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். அவர் தற்கொலைக்கு சந்தோஷ் காரணமாக இருக்கலாம். எங்களுக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையின் தற்கொலை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in