பெண் கவுன்சிலரின் செயலால் வேதனை: வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகர்

பெண் கவுன்சிலரின் செயலால் வேதனை: வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகர்

ரயில் முன் பாய்ந்து சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சின்னத்திரை நடிகர் பாஷா. பல தொடர்களில் நடித்துள்ள இவர், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் இதற்கு கவுன்சிலர் லாவண்யா குமாரிதான் காரணம் என்று செல்ஃபி வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றினார்.

அதில், ஜன்காரெட்டிகுடம் நகரில் உள்ள தனது வீட்டை கவுன்சிலர் லாவண்யா குமாரி இடித்து ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் தடுக்க முயன்ற தன்னையும் தன் குடும்பத்தினரையும் அவரும் அவர் ஆட்களும் தாக்கியதாகவும் அழுதுகொண்டே கூறியுள்ள அவர், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறுகிறார்.

இதையடுத்து ஓடும் ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீஸார் ஓடிச்சென்று அவரைக் காப்பாற்றினர். பின்னர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நடிகர் பாஷாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in