மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிரகாஷ் ராஜ்?

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிரகாஷ் ராஜ்?

நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானாவில் இருந்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 7 மாநிலங்களவை எம்.பி. பதவிகளும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன. இதில், வோடிடெலா லட்சுமிகாந்த ராவ், தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 2 பதவிக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கிறது. இதில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவை சில நாட்களுக்கு முன், அவருடைய பண்ணை வீட்டில் சந்தித்தார். கடந்த பிப்ரவரி மாதமும் சந்திரசேகர் ராவை அவர் சந்தித்து பேசியிருந்தார். இதனால் அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in