தெலுங்கில் 'வாரிசு' வெளியாவதில் சிக்கல்: சென்னையில் ரசிகர்களை நாளை சந்திக்கிறார் நடிகர் விஜய்

தெலுங்கில் 'வாரிசு' வெளியாவதில் சிக்கல்: சென்னையில் ரசிகர்களை நாளை சந்திக்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது ரசிகர்களை பனையூர் அலுவலகத்தில் நாளை சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி படம் இப்படம் வெளியாக உள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகைக்கு சிரஞ்சீவி நடிப்பில் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

இதனால் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலுங்கு தயாரிப்பாளர் சங்க முடிவால் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in