கரோனாவில் இருந்து குணமடைந்தார் த்ரிஷா

கரோனாவில் இருந்து குணமடைந்தார் த்ரிஷா
த்ரிஷா

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை த்ரிஷா, அதில் இருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளை விட இந்த 3-வது அலை அதிவேகமாக பரவி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு திரையுலகினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர்கள் சத்யராஜ், மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் குஷ்பு, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உட்பட பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகை த்ரிஷாவும் பாதிக்கப்பட்டார்.

லண்டன் சென்ற அவருக்கு, அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, ’‘அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தும் புத்தாண்டுக்கு முன்பு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் காரணமாக குணமடைந்து வருகிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து விட்டதாக, ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

‘’நெகடிவ் என்ற வார்த்தையை கேட்டு இதுவரை இவ்வளவு சந்தோஷமாக இருந்ததில்லை. உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. 2022-ம் ஆண்டை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’’ என த்ரிஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in