பெண்கள் ரேப் பண்ணும் பொருளா உங்களுக்கு..? மன்சூர் அலிகானுக்கு குஷ்பு சூடான கேள்வி!

நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு

பெண்கள் பார்ப்பதற்கு ரேப் பண்ணும் பொருளாகவா தெரிகிறார்கள் உங்களுக்கு என மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா, ரோஜா, குஷ்பு ஆகியோரை குறிப்பிட்டு நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ அண்மையில் வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து திரைத்துறையினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, “இப்படித்தான் பலர் பலவிதமான கீழ்த்தரமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் கேவலமாக பேசலாம். கேட்பதற்கு ஆள் இல்லை. யாரும் கேட்கமாட்டார்கள்; இரண்டு நாள்களில் மறந்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டு இதுபோன்று வார்த்தைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

‘முன்ன, பின்ன என்ன பேசியிருக்கிறேன். அதுபற்றி யாருமே பார்க்கவில்லை’ என மன்சூர் அலிகான் கூறுகிறார். முன்ன, பின்ன நீங்கள் என்ன பேசியிருக்கிறீர்கள் என்பது குறித்து கவலை கிடையாது. நீங்கள் சொன்ன வார்த்தைகள் ரொம்ப ரொம்ப தவறான வார்த்தைகள். பெண்களை மதிக்கும் மனிதர்கள் நிச்சயமாக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள்.

பெண்கள் உங்களுக்கு பார்ப்பதற்கு ரேப் பண்ணும் பொருளாகவா தெரிகிறார்கள். உங்களுடைய பேச்சு அதுபோன்று தான் உள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் மெம்பராக இருக்கும்போது இதுபோன்று ஒரு விஷயத்தை நான் எடுத்துச் செல்லவில்லை எனில் அது எனக்கு கேவலம். பெண்களையும், அவர்களின் சுயமரியாதையையும் பாதுகாக்கத்தான், நான் இந்த பொறுப்பில் இருக்கிறேன். த்ரிஷா மட்டுமல்ல... யார் குறித்து பேசினாலும் நான் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கத்தான் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in