மேக்கப் இல்லாத த்ரிஷா, கார்த்தி: லீக்கானது 'பொன்னியின்' செல்வன் பட ஸ்டில்!

மேக்கப் இல்லாத த்ரிஷா, கார்த்தி: லீக்கானது 'பொன்னியின்' செல்வன் பட ஸ்டில்!

'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து மேக்கப் இல்லாமல் நடிகை த்ரிஷா, நடிகர் கார்த்தி ஆகியோர் இடம் பெற்ற புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட முறையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களாக இந்த படம் எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் த்ரிஷா , விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் இடம் பெற்றுள்ளது. ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தகவல்களோ, புகைப்படங்களோ வெளியேறாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது ராணி கெட்டப்பில் நடிகை த்ரிஷா லைட்களுக்கு முன்னாள் இருக்கிறார். அதன் பின்னால் நடிகர் கார்த்தி சாதாரண உடையில் நின்று கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தில் இவரும் மேக்கப் இல்லாமல் உள்ளனர். இந்த புகைப்படம் வெளியானதால் அப்படத்தின் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in