
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
’விக்ரம்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2022-ம் வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்து இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்துடன் இணைய இருப்பதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைய இருப்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்க இருக்கும் ’தளபதி 67’ படத்தில் த்ரிஷா விஜய்யுடன் இணைகிறார். இதற்கடுத்து அடுத்த வருட மத்தியில் தொடங்க இருக்கும் கமல், மணிரத்னம் படத்தில் த்ரிஷா இருக்கிறாரா இல்லையா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.