விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் த்ரிஷா!

விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் த்ரிஷா!

நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர் .

இந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 67' படத்தின் பூஜை சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்தது . இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் . இந்த படத்தை லலித் தயாரிக்கிறார் .

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது . இப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார் . இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் , மன்சூர் அலி கான் மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் 'தளபதி 67' படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in