
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான், ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 38 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தில், நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம்' ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக கமலுடன் இணைய உள்ளார். இதேபோல மணிரத்னம் இயக்கத்தில் 3வது முறையாக த்ரிஷா நடிக்க உள்ளார். நடிகர் விஜயுடன் 'லியோ', அஜித்துடன் 'விடா முயற்சி', தற்போது கமலுடன் இணைந்துள்ளதால் த்ரிஷா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!
விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்
புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்