கோம்ப்ஸ் & காஸ்ஸி
கோம்ப்ஸ் & காஸ்ஸி

செக்ஸ் அடிமையாக நடத்தினார்... பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல அமெரிக்க பாடகியான காஸ்ஸி, ஹிப் ஹாப் பாடகர் கோம்ப்ஸ் மீது பாலியல் வன்கொடுமை, தன்னை செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்தியது, உடல்மீதான வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி, மாடல், நடிகை என பன்முகம் கொண்ட காஸ்ஸி, ஹிப்-ஹாப் பாடகர் மொகல் சீன் கோம்ப்ஸ் மீது பாலியல் வன்கொடுமை, தன்னை செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்தியது, உடல்மீதான வன்முறை தாக்குதல் மற்றும் பலவற்றை முன்வைத்து குற்றம்சாட்டியுள்ளார். கஸ்ஸாண்ட்ரா வென்ச்சுரா என்ற இயற்பெயர் கொண்ட காஸ்ஸி, வியாழன் அன்று பெடரல் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்.

இது கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்த வற்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோம்ப்ஸ்
கோம்ப்ஸ்

காஸ்ஸி தனக்கு 19 வயதில் 37 வயதான கோம்ப்ஸை சந்தித்துள்ளார். 2006 வாக்கில் காஸ்ஸி, கோம்ப்ஸின் ’லேபிள் பேட் பாய் ரெக்கார்ட்ஸு’டன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் காஸ்ஸியின் வாழ்வில் போதைப்பொருள் மற்றும் மதுவுடன் நுழைந்த கோம்ப்ஸ் தனது வாழ்க்கையை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார் எனவும் பின்னர் அதிகளவு தன்மீது வன்முறையை அவர் பிரயோகித்ததாகவும் காஸ்ஸி கூறியுள்ளார். கோம்ப்ஸின் வழக்கறிஞர் பென் ப்ராஃப்மேன், காஸ்ஸி கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கோம்ப்ஸ்
கோம்ப்ஸ்

அமெரிக்க ரெக்கார்ட் லேபிளான பேட் பாய் ரெக்கார்ட்ஸின் நிறுவனர்தான் கோம்ப்ஸ். அமெரிக்காவில் ஹிப் ஹாப்பில் கொடி கட்டிப் பறக்கும் கோம்ப்ஸ் மீது இத்தகைய பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அமெரிக்க ராப் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in