திருவிதாங்கூர் மன்னரை தவறாகச் சித்தரிப்பதா?

திருவிதாங்கூர் மன்னரை தவறாகச் சித்தரிப்பதா?

திருவிதாங்கூர் மன்னரை, வெப்சீரிஸில் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

சோனி லைவ் ஓடிடி தளத்தில் ’ராக்கெட் பாய்ஸ்’ என்ற வெப்சீரிஸ் வெளியாகியுள்ளது. அபய் பன்னு இயக்கியுள்ள இந்த வரலாற்றுத் தொடர், சுதந்திர இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றத்தைச் சொல்லும் கதையைக் கொண்டது.

இதில், நடிகர் ஜிம் சர்ப், இந்திய அணு விஞ்ஞானி ஹோமி ஜே.பாபாவாகவும், இஷ்வக் சிங், இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயாகவும் பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாயாக, ரெஜினா கஸண்ட்ராவும், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகவும் நடித்துள்ளனர். இந்த தொடர் கடந்த 4-ம் தேதி வெளியானது.

’ராக்கெட் பாய்ஸ்’ போஸ்டர்
’ராக்கெட் பாய்ஸ்’ போஸ்டர்

இதில், திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மாவின் பெயரைக் கெடுக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, அவர் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லக்‌ஷ்மிபாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அந்தத் தொடரில் ஜவாஹர்லால் நேரு, அணு விஞ்ஞானி ஜே.பாபா ஆகியோர், சித்திரை திருநாள் மகராஜாவுடன் டெல்லியில் பேசியதாகவும் அப்போது, திருவிதாங்கூரில் உள்ள மோனோசைட் தாதுக்கள் நாட்டுக்கு கிடைப்பது அவசியம் என்று நேரு விவாதிப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அஸ்வதி திருநாள் கவுரி லக்‌ஷ்மிபாய்
அஸ்வதி திருநாள் கவுரி லக்‌ஷ்மிபாய்

நேரு இல்லாத நேரத்தில் சித்திரை திருநாள் மீது, பாபா ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை போலவும் காட்சிகள் அமைத்துள்ளனர். அதில், 50 ஆயிரம் டன் மோனோசைட் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பியாவுக்கு 3 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்ததாகவும் அந்தப் பணம் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டதாகவும் அந்த வெப்சீரிஸில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை, அடிப்படை ஆதாரமில்லாமல், உண்மைக்குப் புறம்பாக மோசமாகச் சித்தரித்துள்ளதாக அவர் மருமகள் அஸ்வதி திருநாள் தெரிவித்துள்ளார். இதனால், இந்தத் தொடருக்கு எதிராக, சட்டப்படி நடிவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in