‘ஹே சினாமிகா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘ஹே சினாமிகா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹே சினாமிகா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குநர் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

உற்சாகமிக்க தனித்துவ இளைஞராக துல்கரும், அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானியாக அதிதியும் நடித்துள்ளனர். சில வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது என்பது காஜல் வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசையின் கலலையாக உருவாகியுள்ள ஹே சினாமிகா, காதல் மற்றும் நட்பைக் கொண்டாடும் இளைமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை டிரெய்லர் வெளிப்படுத்துவோடு படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

படம் குறித்து பேசிய பிருந்தா, "இது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இளைஞர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதே சமயம், அனைத்து வயதினரும் இப்படத்தைப் பார்த்து மகிழலாம். கொண்டாட்டம், குதூகலம் என உணர்ச்சிகளின் உற்சாகக் குவியலாக ‘ஹே சினாமிகா’ இருக்கும்," என்று கூறினார்.

‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.