கல்லூரியில் புரட்சியை உருவாக்கும் `மீம் பாய்ஸ்’

கல்லூரியில் புரட்சியை உருவாக்கும் `மீம் பாய்ஸ்’

கல்லூரியில் புரட்சியை உருவாக்கும் கதையாக, ’மீம் பாய்ஸ்’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது.

சோனி லிவ் தளத்தின் ஒரிஜினல் படைப்பாக, உருவாகி இருக்கிறது, ’மீம் பாய்ஸ்’ . ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை, அருண் கௌஷிக் இயக்கியுள்ளார். இதில், குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்ய பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கோகுல் கிருஷ்ணா ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த தொடருக்கு, கோபால் ராவ் இசை அமைக்கிறார்.

இந்தத் தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜ்ஜை நடத்துகிறார்கள். அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாகக் காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் புரட்சியை உருவாக்குவது கதை.

மீம் பாய்ஸ் தொடரை அடுத்து சோனி லிவ் அடுத்தடுத்த படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அறிவிப்வை விரைவில் வெளியிட இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in