`எங்களை பாலியல் உறவு செய்வதை நிறுத்துங்கள்'- கேன்ஸ் விழாவை பதறவைத்த உக்ரைன் பெண்ணின் நிர்வாணப் போராட்டம்

`எங்களை பாலியல் உறவு செய்வதை நிறுத்துங்கள்'- கேன்ஸ் விழாவை பதறவைத்த உக்ரைன் பெண்ணின் நிர்வாணப் போராட்டம்

"எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்" என்று தனது உடலில் வாசகம் எழுதியபடி உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாக கேன்ஸ் விழாவில் போராட்டம் நடத்தியது அனைவரையும் பதறவைத்தது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். பலர் தங்கள் பெற்றோர்கள், உறவுகள், பிள்ளைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். உக்ரைனில் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். சாலைகளிலும், வீதிகளிலும் இந்த கொடூரத்தை நிகழ்த்தி வருகின்றனர் ரஷ்ய வீரர்கள்.

இந்நிலையில், உக்ரைனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடி வந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். தனது உடலில், "எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்" என்று எழுதிக் கொண்டு ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்று கோஷமிட்டார். அந்த பெண் தனது உடலில் உக்ரைன் நாட்டின் கொடியை வரைந்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், உடனே அந்த பெண்ணை துணியால் போர்த்தியப் படி அழைத்து சென்றனர்.

கேன்ஸ் விழாவில் பெண் ஒருவர், ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நிர்வாணப் போராட்டம் நடத்தியது பலரை அதிர்ச்சியடைய வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in