ஹாலிவுட் ரசிகர்கள் உற்சாகம்... 30 ஆண்டுகள் கழித்து டாம் ஹாங்ஸ் உடன் மீண்டும் இணையும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படக்குழு

ஃபாரஸ்ட் கம்ப்
ஃபாரஸ்ட் கம்ப்

1994-ல் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ வெற்றி திரைப்படத்தின் குழு, நாயகன் டாம் ஹாங்ஸ் உடன் புதிய திரைப்படத்துக்காக மீண்டும் இணைகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஃபாரஸ்ட் கம்ப்(Forrest Gump) திரைப்படம், சினிமா ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்களை பட்டியலிட்டால், ஃபீல் குட் வரிசையில் ஃபாரஸ் கம்ப் படத்துக்கு நிச்சயம் இடமுண்டு. டாம் ஹாங்ஸ் தனித்துவ நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவானது.

ஃபாரஸ்ட் கம்ப்
ஃபாரஸ்ட் கம்ப்

உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட இந்த திரைப்படத்தை, ஓடிடி உபயத்தில் இன்றைக்கும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மீம்ஸ் கிரியேட்டர்களின் தயவில் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. வணிகத்திலும் விமர்சனத்திலும் பெரும் சாதனை படைத்த ஃபாரஸ் கம்ப் விருதுகளையும் குவித்தது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.

30 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது ‘ஹியர்’(Here) என்ற தலைப்பில் வரவிருக்கும் திரைப்படத்துக்காக, நடிகர்கள் டாம் ஹாங்க்ஸ், ராபின் ரைட் ஆகியோருடன், இயக்குனர் ராபர்ட் ஜெமெக்கிஸ், இணை எழுத்தாளர் எரிக் ரோத் ஆகியோரை உள்ளடக்கிய படக்குழு மீண்டும் இணைகிறது.

முன்னதாக ’காஸ்ட் அவே’(2000),’தி போலார் எக்ஸ்பிரஸ்’(2004 ) ’பினோச்சியோ’(2022) ஆகிய திரைப்படங்களுக்காக நடிகர் டாம் ஹாங்ஸ், இயக்குனர் ராபர்ட் ஜெமெக்கிஸ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர். ஆனால் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் குழு முழுமையும் இணைவது 30 ஆண்டுகள் கழித்தே சாத்தியமாகி இருக்கிறது.

ஃபாரஸ்ட் கம்ப்
ஃபாரஸ்ட் கம்ப்

ஃபாரஸ்ட் கம்ப் போலவே ஹியர் திரைப்படமும் நாவல் ஒன்றின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. 2010-ல் ரிச்சர்ட் மெக்குயர் எழுதிய கிராஃபிக் நாவலில் இருந்தே ஹியர் திரைப்படமும் உருப்பெற்றுள்ளது. ஃபாரஸ்ட் கம்ப் போன்றே கால இடைவெளியில் முன்னும் பின்னுமாக புதிய திரைப்படமும் ஊடறுக்க இருக்கிறது.

டாம் ஹாங்ஸ் உட்பட அனைவரும் வயோதிகத்தின் முதிர்ச்சியை எட்டி இருப்பதால், புதிய் ஏஐ தொழில் நுட்பம் வாயிலாக உறுத்தாத உருமாற்றம் மூலம் அனைவரையும் இளமையாக தோன்றச் செய்ய இருக்கின்றனர். இதன்பொருட்டு ’மெட்டாபிசிக் லைவ்’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது படப்பிடிப்பின் போதே லைவாக முகத்தின் பொலிவை கூட்டுதல் மற்றும் முதுமையை நீக்குதல் ஆகியவற்றில் ஈடுபடும். நவம்பர் மத்தியில் ஹியர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in