டாம் குரூஸின் `மிஷன் இம்பாசிபிள் 7’ தலைப்பு அறிவிப்பு

டாம் குரூஸின் `மிஷன் இம்பாசிபிள் 7’ தலைப்பு அறிவிப்பு
Photo Credit: David James

டாம் குரூஸின் ’மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், 80 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சினிமாதுறையினர் பங்கேற்கும் சினிமாகான் விழா, கடந்த 25-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் ’அவதார்’ படத்தின் அடுத்த பாகத்தின் தலைப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் டிரெய்லரும் இங்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் இப்போது, ’மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரும் இங்கு திரையிடப்பட்டது.

அதன்படி, இந்தப் படத்துக்கு ’மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’ (Mission: Impossible – Dead Reckoning Part One) என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தை, அடுத்த வருடம் ஜூலை மாதம் 14-ம் தேதி வெளியிட திட்டம் வைத்துள்ளனர்.

ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களுக்கும் ரசிகர்கள் அதிகம். ஏற்கெனவே வெளியான இந்த வரிசை படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்துள்ளன.

இந்தப் படத்தின் ஏழாவது வரிசை படம், மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன் என்ற பெயரில் இப்போது உருவாகியுள்ளது. இதில் டாம் குரூஸுடன் விங் ராமஸ், சைமன் பெக், ரெபக்கா பெர்குசன் உட்பட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் மேக்குயர்ரி இயக்கியுள்ளார். அவர் இயக்கும் மூன்றாவது, மிஷன் இம்பாசிபிள் வரிசை படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in