பிரபல தெலுங்கு நடிகர் திடீர் மரணம்

தந்தை கிருஷ்ணா, தம்பி மகேஷ் பாபு உடன் ரமேஷ் பாபு(வலது)
தந்தை கிருஷ்ணா, தம்பி மகேஷ் பாபு உடன் ரமேஷ் பாபு(வலது)

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மகேஷ்பாபுவின் சகோதரரும், தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மூத்தமகன் ரமேஷ்பாபு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், சாம்ராட் என்ற படம் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், பிறகு தனது சகோதரரும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான மகேஷ்பாபு நடித்த ’அர்ஜுன்’ என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். தொடர்ந்து படங்கள் தயாரித்தும் வந்தார்.

ரமேஷ்பாபுவுக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னை இருந்து வந்தது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை திடீரென மோசமானது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்குத் தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் பாசத்துக்குரிய ரமேஷ் பாபு மறைந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எங்கள் நெஞ்சத்தில் வாழ்வார். கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரசிகர்கள் வரவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in