‘எதற்கும் துணிந்தவன்’: அடுத்த பாடல் இன்று வெளியீடு

 ‘எதற்கும் துணிந்தவன்’: அடுத்த பாடல் இன்று வெளியீடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கருவாகக் கொண்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று ரிலீஸ் ஆகிறது.

இயக்குநர் பாண்டியராஜ் டைரக்‌ஷனில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. கிராமத்து கதைக்களத்தில் உருவாகி யுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி மாதம் 4-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, டி.இமான் இசையில் உருவான இப்படத்தின் ‘வாடா தம்பி’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in