பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!

'பத்து தல' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு தனது 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

`மாநாடு' படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவுக்கு 39வது பிறந்தநாள். இந்நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in