நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு!

பாமக மிரட்டல் எதிரொலி
சூர்யா
சூர்யா

பாமகவினர் மிரட்டல் காரணமாக சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான சூர்யா நடித்த 'ஜெய் பீம்' திரைப்படம் வன்னியர்களை அவதூறாக சித்தரிப்பதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, சூர்யாவுக்கு பாமக மற்றும் பல்வேறு அமைப்பினர் மிரட்டல்களை விடுத்தனர்.

சூர்யா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ்.
சூர்யா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ்.

இந்நிலையில் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'ஜெய் பீம்' படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை கடலூர் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியிட அனுமதிக்கக் கூடாது என அந்த மாவட்ட பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பினார்.

இதன் காரணமா, சென்னை தியாகராய நகர் ஆற்காடு தெருவில் வசித்து வரும் நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in