விக்ரம் பிரபுவின் அடுத்தப் பட டைட்டில் வெளியீடு

விக்ரம் பிரபுவின் அடுத்தப் பட டைட்டில் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் படத்துக்கு ’இரத்தமும் சதையும்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. கதை திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

தயாரிப்பாளர் கார்த்திக் அட்வித், விக்ரம் பிரபு,  இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர்
தயாரிப்பாளர் கார்த்திக் அட்வித், விக்ரம் பிரபு, இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர்

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதை அடுத்து அவர், ’இரத்தமும் சதையும்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in